ஐரோப்பா, பிரித்தானியா, விசா நேர்காணலில் (Visa Interview) முதல் முறையிலேயே வெற்றி பெறுவதற்கான இரகசியங்கள்!


உங்கள் ஆவணங்கள் எவ்வளவு முழுமையாக இருந்தாலும், வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும், விசா நேர்காணலில் போது நீங்கள் சொல்லும் ஒரு தவறான பதில் உங்கள் முழு கனவையும் கலைத்துவிடக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?


பலர் நினைப்பது "நான் உண்மையைத்தானே சொல்கிறேன், பயப்பட ஒன்றுமில்லை" என்று. ஆனால், ஒரு விசா அதிகாரி எதிர்பார்க்கும் "தொழில்முறை பதில்களுக்கும்" நாம் கொடுக்கும் "சாதாரண பதில்களுக்கும்" இடையே பெரிய இடைவெளி உள்ளது.


முக்கிய நாடுகளின் நேர்காணல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதைப் பார்ப்போம்:


1. ஐரோப்பா (Schengen & National Visa): "நீங்கள் உண்மையில் படிக்கத்தான் செல்கிறீர்களா?"

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லாட்வியா, லிதுவேனியா, ஸ்வீடன் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகளில் கல்வி விசாவுக்காக (Student Visa) நேரடி நேர்காணல் அல்லது ஒன்லைன் நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன.


அவர்கள் எதைத் தேடுகிறார்கள்: நீங்கள் உண்மையில் படிக்கச் செல்லும் மாணவர் தானா? அல்லது விசா பெற்றுக்கொண்டு வேறு நாட்டிற்குத் தப்பிச் செல்ல முயற்சிப்பவரா?


2. பிரித்தானியா (UK): "நம்பகத்தன்மை நேர்காணல்" தான் மிக முக்கியம்!

பிரித்தானியா செல்பவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் இதுவாகும். இது பல்கலைக்கழகத்தினால் மற்றும் விசா அலுவலகத்தினால் (UKVI Interview) என இரண்டு கட்டங்களாக நேர்காணல் நடக்கலாம்.


கவனம்: உங்கள் பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு மீண்டும் சரிபார்க்கப்படும். ஒரு பொய் சொன்னாலும் உங்கள் CAS ரத்து செய்யப்படும். பாடத்திட்டத்தின் தொகுதிகள் (Modules), பல்கலைக்கழகத்தின் இருப்பிடம் மற்றும் எதிர்கால வேலைத் திட்டம் குறித்து "மனப்பாடம் செய்த பதில்களை" (Memorized answers) வழங்கினால் விசா மறுக்கப்படலாம்.


3. அவுஸ்திரேலியா (Australia): "Genuine Student (GS)" சோதனை

ஆஸ்திரேலியாவின் புதிய விதிகளின்படி, அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் உங்களை அழைக்கலாம்.


எச்சரிக்கை: எதிர்பாராத நேரத்தில் இந்த அழைப்பு வரலாம். அந்த நேரத்தில் "நான் பிறகு பேசுகிறேன்" என்று கூற முடியாது.


கேள்வி: "ஏன் இந்த பாடத்திட்டத்தை இலங்கையில் செய்யாமல் ஆஸ்திரேலியாவிற்கு வருகிறீர்கள்?" என்ற கேள்விக்கு மிகவும் தர்க்கரீதியான (Logical) பதிலை வழங்க வேண்டும்.


4. கனடா மற்றும் அயர்லாந்து (Canada & Ireland)

இந்த நாடுகளில் நேர்காணல்கள் குறைவு. ஆனால், உங்கள் கோப்புகள் குறித்து சந்தேகம் ஏற்பட்டால் (Background Check) அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள். அப்போது மிகவும் கவனமாகப் பதிலளிக்க வேண்டும்.


நேர்காணலை வெற்றிகரமாக முடிக்க "Super Answers" தயாரிக்கும் முறை

பொதுவாகக் கேட்கப்படும் 3 கேள்விகளும் அதற்கான "வெற்றிகரமான" பதில்களும் இங்கே:


Q1: Why did you choose this University? (ஏன் இந்த பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?)


பலவீனமான பதில்: "அதன் தரவரிசை (Ranking) நல்லது, அழகானது, எனது நண்பர் ஒருவர் அங்கு இருக்கிறார்."


சிறந்த பதில்: "நான் 3 பல்கலைக்கழகங்களை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் இந்தப் பல்கலைக்கழகத்தை நான் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் அங்குள்ள [ABC] ஆய்வக வசதிகள் மற்றும் பேராசிரியர் [XYZ] அவர்களின் வழிகாட்டலில் ஆராய்ச்சி செய்யக் கிடைக்கும் வாய்ப்புமே ஆகும். மேலும் அங்குள்ள [Module Name] எனது எதிர்கால வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது." (Be Specific!)


Q2: What is your future plan? (உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?)


பலவீனமான பதில்: "படிப்பை முடித்த பிறகு அங்கேயே ஒரு வேலையைத் தேடிக்கொள்வேன்." (Big Red Flag! 🚩)


சிறந்த பதில்: "எனது பட்டப்படிப்பை முடித்த பிறகு நான் மீண்டும் இலங்கை திரும்புவேன். பின்னர் [ஒரு பிரபலமான நிறுவனத்தின் பெயர்] இல் [ஒரு பதவி] க்காக விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தப் பட்டப்படிப்பு இலங்கையில் எனக்கு உயரிய சம்பளத்தைப் பெற்றுத் தரும்."


Q3: Who is your sponsor? (உங்களுக்கு யார் செலவு செய்கிறார்கள்?)


பலவீனமான பதில்: "அப்பா."


சிறந்த பதில்: "எனது தந்தை தான் எனக்கு அனுசரணை (Sponsor) வழங்குகிறார். அவர் [வேலை/வியாபாரம்] செய்கிறார். அவரது வருடாந்த வருமானம் [தொகை]. அது தவிர எங்களுக்கு [ஏனைய சொத்துக்கள்] உள்ளன. எனது கல்விச் செலவுகளைக் கவனிக்க அவரிடம் முழுமையான நிதி வசதி உள்ளது."


Ahasa Consultancy வழங்கும் சிறப்புப் பயிற்சி

நேர்காணலைக் கண்டு பயப்பட வேண்டாம். Ahasa Consultancy ஊடாக விண்ணப்பிக்கும் உங்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பை வழங்குகிறோம்.


எமது நிறுவனத்தில் ஐரோப்பிய நிபுணர் (European Expert) ஒருவரால் நடத்தப்படும் விசேட "Interview Preparation Sessions" இடம்பெறும்.


உண்மையான விசா அதிகாரி முன்னிலையில் இருப்பது போன்ற மாதிரி நேர்காணல்கள் (Mock Interviews).


உங்கள் பதில்களில் உள்ள குறைகளைத் திருத்தி, சிறந்த பதில்களை (Refined Answers) உருவாக்கித் தருதல்.


உங்கள் உடல் மொழி (Body Language) மற்றும் தன்னம்பிக்கையை (Confidence) மேம்படுத்துதல்.


விசா என்பது ஒரு அதிர்ஷ்ட லாபம் அல்ல. சரியாகப் பயிற்சி பெற்றால், அது நீங்கள் வெல்லக்கூடிய ஒரு போட்டி!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.