வாருங்கள் உறவுகளே த.தே.மு.இனருடன் கருத்தாடல் செய்வோம்.-யேர்மனி!

 


"தையிட்டி போராட்டம்" சமூகமயப்படுத்தப் பட்டதற்கு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பங்கு அளப்பரியது.


காவல்துறை / இராணுவ அடக்குமுறைகளுக்குப் பயந்து எல்லோரும் எட்ட நின்ற நிலையிலும், போராட்டம் மூலமே அழுத்தங்களைக் கொடுக்க முடியும் என்பதை நான்கு ஐந்து பேராக நின்று தொடர் போராட்டங்கள் மூலம் நம்பிக்கையளித்து, பெரும்பாலான காணி உரிமையாளர்களை படிப்படியாக போராட்டத்தில் இணைய வைத்த பெரும் சமூகப்பணியை முன்னெடுத்தது தமிழ்த்தேசிய முன்னணியே.


முன்னணியின் செயலாளர் தனியாளாக இரவிரவாக போராட்டத்தில் நின்று, காவல்துறையால் தூக்கி வீசப்பட்டதெல்லாம் செய்தி.


இங்கு இவற்றை குறிப்பிடுவது, முன்னணி புராணம் பாடுவதற்கல்ல,மாறாக முன்னணி அங்கு போராட்டத்தைத் துணிந்து தொடர்ந்திருக்காவிட்டால் இந்தளவுக்கு அப்போராட்டம் சமூகமயப்படுத்தப்பட்டிருக்காது என்பதை சுட்டிக்காட்டவே…


இருப்பினும், சளைக்காமல் தொடரப்பட்ட அந்த போராட்டமே இன்று சமூகத்தின் பலதரப்பினரோடு, பல்கலைக்கழக மாணவர்களும் திரண்டெழக்காரணமாக அமைந்திருந்தது.


இன்று தையிட்டி உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பேசு பொருளாகியிருப்பதற்கு அடித்தளமிட்டது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியே என்பதனைக் காலம் பதிவு செய்துள்ளது.


இன்று..

ஒற்றையாட்சியை முகான்மையாகக் கொண்ட புதியஅரசியல் யாப்பொன்றை அனுரா அரசு கொண்டுவரவுள்ளது. நடைமுறையிலுள்ள ஒற்றையிட்சிவரைவுகள் எல்லாமே தமிழர் பிரதிநிதிகளின் எதிர்ப்புடனேயே நிறைவேற்றப்பட்டிருந்தது. 


ஆனால்,

வரலாற்றில் முதல் தடவையாகப் பெரும்பான்மையான தமிழ்ப் பிரதிநிதிகளின் ஆதரவுடன் இந்த ஒற்றையிட்சி அரசியல் யாப்பு நிறைவேறும் ஆபத்தான நிலையில்... 

இச்செய்தியையும் மக்களிடம் கொண்டுசெல்லும் களப்பணியையும் முன்னணியினர் மட்டுமே முன்னெடுத்துவருகிறார்கள். இந்நிலையில்,


நாம் என்ன செய்யலாம்? வாருங்கள் உறவுகளே த.தே.மு.இனருடன் கருத்தாடல் செய்வோம்.


காலம்:-

 நாளை ஞாயிற்றுக்கிழமை 11.01.2026

                

நேரம் :- 

 பிற்பகல் 3 மணி.

இடம்:-

Gemeindehaus

Sri kanagathurka Ampel Aalayam

Backenkamp 7

58239 Schwerte.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.