எங்களுக்கென்றொரு தலைவன் இருந்தான்!
யாழ்ப்பாணம் வந்து தனது சொந்தக் காலால் நடந்த ஜனாதிபதி, சொந்தக் கையைத் தூக்கிக் காட்டிய ஜனாதிபதி என்று காணாததைக் கண்டதைப் போல் படம் காட்டுபவர்களே! எங்களுக்கென்றொரு தலைவன் இருந்தான், சொந்தமாக முப்படை கொண்டு இறுதிவரை குடும்பத்தோடு களத்தில் நின்றான் என்பதை மறந்து விடாதீர்கள்! எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் இன்று (16.01.2026) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.
இனப் படுகொலை புரிந்தவனைக் கொண்டாடி விடுதலைக்குத் தகுதியற்ற இனம் நாமென்று நிரூபித்துவிடாதீர்கள்! அன்புரிமையுடன் பதிவு செய்கின்றேன்! புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்! எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை