ஆபிரகாம் லிங்கன் கப்பலை இலக்குவைத்து ஈரான் தனது ஒருமித்த தாக்குதலை நடத்த திட்டமிடுகிறது!

 


ஆபிரகாம் லிங்கன் கப்பலை இலக்குவைத்து ஈரான் தனது ஒருமித்த தாக்குதலை நடத்த திட்டமிடுகிறது.

ஆனால் அமெரிக்காவின் திட்டம் எதுவாக இருக்கும் என கூறவேண்டுமானால்,இந்த ஆபிரகாம் லிங்கனை எங்கெங்கு நிலையெடுத்திருந்து ஈரான் தாக்குவதற்காக தன்னை தயார்படுத்துகிறதோ அந்த நிலைகளை முதலில் தனது அமைதிப்புறாக்களான B1,B2,B3 உள்ளிட்ட நவீன போர்விமானங்களை பல பத்தாக சத்தமின்றி அனுப்பி ஒரு மாபெரும் வான்வழி ருத்திரதாண்டவத்தை அமெரிக்கா நடத்துவதற்கான சந்தர்ப்பமே மிகவும் அதிகமாக உள்ளது.


2025 ஜூன் மாதம் அமெரிக்கா ஈரானின் அணு உலைகள்மீது நடத்திய B2’ விமான தாக்குதல்களைக்கூட அந்த குண்டுகள் அங்கு வீழ்ந்து வெடித்த பிற்பாடே ஈரானால் அதுவும் ஊகித்து மட்டுமே அவற்றை கூறக்கூடியதாக இருந்தது.


உண்மையில் இந்த விமானங்களை சுட்டுவீழ்த்துவதென்பது பெரும் பகல்கனவாகும்.


ஏனென்றால் இந்த விமானங்களை பாதுகாத்துவரும் விமானங்களை கடந்தே இந்த B2’விமானங்களை எதிரிகளால் என்னவும் செய்யமுடியும்.


அமெரிக்கா தான் வைத்திருக்கும் அதி உயர் முதலாம் நிலை தரமுடைய F35’போர் விமானங்களையே இந்த B2’ விமானங்களுக்கான பாதுகாப்பிற்காக அனுப்பிவைக்கின்றது.


அவற்றை ரஷ்சிய SU35’ போர் விமானங்களால்கூட சுட்டுவீழ்த்துவதென்பது பெரும் கேள்விக்குறியே.


ஆகவே அமெரிக்கா எனும் இராட்சத கடல் தரை வான் அசூரனோடு ஈரானின் படைகள் மோதி வெல்வதென்பது இயலாத காரியமே.


ஈரானிய படைகள் முயற்சி செய்வார்கள் ஆனால் அவர்களுக்கான முடிவென்பது மரணம்தான்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.