பனி சிற்பங்களாக மாற்றப்படும் சீன நகரம்!📸


2026 ஆம் ஆண்டுக்கான ஹார்பின் சர்வதேச பனி மற்றும் சிற்ப விழா ஆரம்பமானது.


வடகிழக்கு சீனாவின் ஹய்லாங்ஜியங் மாகாணத்தின் (Heilongjiang province) தலைநகரான ஹார்பின் நகர் ஒரு குளிர்ப்பிரதேசமாகும்.


இங்கு, டிசம்பர், ஜனவரியில் கடும் குளிர் நிலவும். இந்த மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை −17.3 °C ஒட்டி இருக்கும்.


இந்த குளிரில், ஆண்டுதோறும் பனி சிற்பம் மற்றும் கண்காட்சி திருவிழா நடத்தப்படுகிறது.


பனிசிற்ப போட்டியில் உலகநாடுகளைச் சேர்ந்த பல்வேறு குழுவினர் பங்கேற்று தங்கள் ஆக்கங்களை காட்சிப்படுத்துவர். இந்த பனி சிற்ப விழாவில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.


முதலில், உள்நாட்டு சிற்ப கலைஞர்கள் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலையில், தற்போது சர்வதேச கலைஞர்களையும் இந்த விழா ஈர்த்து வருகிறது.


ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை கவரும் இந்த திருவிழா, கலை, கலாசாரம் மற்றும் இயற்கை அழகை ஒருங்கிணைக்கும் உலகப் புகழ்பெற்ற நிகழ்வாக திகழ்கிறது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.