விவசாயியை தாக்கி கொன்றது மான்!!

 


குருணால் ஹேரத்கம பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாய நிலத்தை பாதுகாக்கச் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த நிலையில்,  மான் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதே சம்பவத்தில் மேலும் ஒருவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹேரத்கம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர், பொல்பிதிகம – ஹேரத்கம – கலஹிட்டியாவைச் சேர்ந்த 47 வயதான எம்.ஏ. சமந்த விஜேவர்தன என்பவர் எனவும் இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதே பகுதியைச் சேர்ந்த, 80–85 வயதுக்கு இடைப்பட்ட பஸ்நாயக்க என்ற விவசாயி, மான் தாக்குதலால் விலா எலும்பு முறிந்து, பொல்பிதிகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருவரும் 11ஆம் திகதி மாலை, ஹேரத்கம வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் அருகிலுள்ள வயல் பகுதியில், காட்டு யானைகளிடமிருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கச் சென்று, நேற்று  வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னால் சென்ற விவசாயியை மான் தாக்கி குத்துவதை பார்த்த பின்னால் வந்தவர் அவரை காப்பாற்ற ஓடிய போது, அந்த மான் அவரையும் தாக்கியுள்ளது.

கடுமையாக காயமடைந்த இருவரையும் பிரதேசவாசிகள் பொல்பிதிகம ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், சமந்த விஜேவர்தன அங்கு உயிரிழந்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.