தப்பி ஓடிய குற்றவாளிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!
நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும்
அழைத்துவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நீதிமன்றத்தைப் புறக்கணித்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான விசேட நடவடிக்கை பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் 2026 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் கடந்த 2024 ஆம் ஆண்டில் 10 சந்தேகநபர்களையும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேகநபர்களையும் வெளிநாடுகளில் இருந்து எம்மால் நாட்டுக்கு அழைத்து வர முடிந்தது.

.jpeg
)





கருத்துகள் இல்லை