யாழில் மக்கள் திலகம் MGR-இன் 109-வது பிறந்தநாள் விழா! 📸


"கொடுத்தார் கொடுத்தார் அடுக்கடுக்காய் கொடுத்தார்..." ஏழை எளிய மக்களின் இதய தெய்வமும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 109-வது பிறந்ததினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


 யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலையடியில் இந்த உணர்வுபூர்வமான நிகழ்வு இடம்பெற்றது.


 யாழ். எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் குடும்பத்தினரால் இந்த பிறந்தநாள் நிகழ்வுகள் மிக நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


நிகழ்வின் போது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் மறைந்த எம்.ஜி.ஆர் விசுவாசி கோப்பாய் சுந்தரலிங்கம் ஆகியோரின் உருவப்படங்களுக்கு நெய் விளக்குகள் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.


அன்னாரது சாதனைகளையும், மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து இப்பகுதி மக்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது மரியாதையைச் செலுத்தினர்.


எம்.ஜி.ஆர் அவர்களின் புகழ் காலத்தால் அழியாதது என்பதற்கு யாழ்ப்பாண மண்ணில் நடைபெறும் இவ்வாறான நிகழ்வுகளே சாட்சி.

#MGR109 #MGRBirthday #Jaffna #MG #PuratchiThalaivar #MakkalThilagam #Srilanka #JaffnaEvents #MGRDevotees #KopaySundaralingam #Kalviyankadu #எம்ஜிஆர் #பிறந்தநாள் #யாழ்ப்பாணம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.