ஈரான் மீதான மாபெரும் அமெரிக போர் நடந்தே தீரும்!
பேச்சுவார்த்தைக்கான கடைசி சந்தர்ப்பத்தை ஈரானுக்கு கொடுத்துவிட்டு,மெளனமாக பாரிய யுத்தத்திற்கான சகல ஏற்பாடுகளையும் இரவு பகலாக,மிகவும் வேகமாக அமெரிக்க படைகள் செய்துவருகின்றன.
அமெரிக்க நிலத்தொடர்பற்ற ஈரானோடு அமெரிக்கா மோதவேண்டுமானால் அதன் இராணுவ பலத்தினை இரண்டு பிரதான மார்க்கங்களை பயன்படுத்தியே அது ஈரானை நோக்கி தகர்த்தவேண்டும்.
ஒன்று கடற்படை,இன்னொன்று விமானப்படை!
இந்த இரு மார்கங்களும் ஊடாக கடந்த சில நாட்களாக இரவுபகல்பாராது அமெரிக்க ஆயுதப்படைகள் தமக்கு தேவையான ஆயுதங்களை ஈரானை அண்டிய கடற்பரப்பிலும்,தனக்கு சாதகமான நாடுகளின் தரையிலும் வகைதொகையின்றி குவித்துவருகிறார்கள்.
ஒரு அமெரிக்க படைவீரனுக்கு பத்து ஈரானிய படைவீரர்கள் சமம் என்று கூறுவதே பொருத்தமாகும்.
காரணம் உலக தரம்வாய்ந்த போர் பயிற்சிகளையும், நவீன ஆயுதங்களை கையாளும் பயிற்சிகளையும்,இலத்திரணியல் சாதனங்களை இலகுவாக இயக்கக்கூடிய திறமைகொண்ட படைவீரர்களாகவே அமெரிக்க படைகளில் இணைக்கப்படும் ஒவ்வொரு படைவீரனும் இருப்பதை எவராலும் மறுக்கமுடியாது.
எனவேதான் ஈரானின் போரிடும் நிலையிலுள்ள சுமார் ஒரு இலட்சத்து இருபத்து ஐயாயிரம் வீரர்களை சமாளிப்பதற்கு அமெரிக்கா தனது படைகளில் சுமார் நாற்பதாயிரம் வரையில் தயார்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நாற்பதாயிரம் வீரர்களும் ஈரானுக்குள் சென்று தாக்குதல் தடத்தப்போவது கிடையாது. ஆனால் இதில் கணிசமானவர்கள் தேவைக்கு ஏற்ப ஈரானுக்குள் களமிறக்கப்படுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆகவே ஈரான்மீதான அமெரிக்க போர் உறுதியாகிவிட்டது,இரண்டு தரப்புக்களுக்கும் போரை ஒருவருக்கொருவர் எதிர்கொள்ள சில கால அவகாசம் கட்டாயம் தேவையாகவும் உள்ளது.
அதுவரை பேச்சுவார்த்தை என்பார்கள், பேசப்போவதாக நடிப்பார்கள்,இராணுவ தயார்படுத்தல்கள் முடிந்த கையோடு போரைத்தான் முடிவாக கையில் எடுப்பார்கள்.
எனவே போர்தான் முடிவாகும்,பேச்சுவார்த்தைதான் போருக்கான அவகாசமாகும்!
குறிப்பு:எதுக்கும் அரிசியும்,பருப்பும் சீனியும் தேயிலையும் கொஞ்சம் வாங்கி வையுங்கோ சண்டை துவங்கினால் வான்வழியும்,கடல்வழியும் சில வாரங்களுக்கு,மாதங்களுக்கு தடைப்பட வாய்ப்புண்டு.
ஏனென்றால் இந்து சமுத்திரத்திற்கும்,வளைகுடா பகுதிக்கும் இடையேயான சகல கடற் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.





.jpeg
)





கருத்துகள் இல்லை