“கடலின் மடியின்” குழுமத்தின் நினைவுகள் பாகம் - 1, புத்தக வெளியீடு.லன்டன்!📸
எழுதப்பட்ட எம் போராட்டச் சரிதங்களை அந்த உப்புக்காற்றும், அங்குநின்ற வீரருமே அறிவர்.
நாற்புறமும் கடல்சூழ்ந்த நிலையில், எதிரியானவன் இனங்கண்டுவிட்டால் அங்கு ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது, விசையைக் கூட்டித் தப்பிக்கவும் இயலாது.
உயிரை மண்ணுக்கு எழுதிக்கொடுத்துவிட்ட பிறகு, எதிரியின் குண்டுகளுக்கும் மிரட்டும் கடலுக்கும் அஞ்சக்கூடியவர்களா நம் மண்ணின் வீரர்கள்...?
திரைகடலோடித் திரவியம் தேடியது ஒரு காலம், திரைகடலோடி பொருள் பல கொணர்ந்து மண்ணுக்குத்தந்த நம் மறவர்களின் காலம் நாம் வாழும் காலம்.
வரலாறாய் விரிந்த போர்க்களங்களிற்கு, வாய்த்த பொருட்களையெல்லாம் கடல்தாண்டிக் கொண்டுவந்து கரைசேர்த்து, கரைசேராமலே போய்விட்ட எம் வீரர்களின் வரலாறு இது.
எழுத்து: எஸ்.கே
காலம்: 01.03.2026 ஞாயிறு பி.ப 04:00 - 06:00 மணி
Alperton Community School,
Ealing Road,
Wembley
HA0 4PW
London,
📍Alperton Underground Station.near 📌
தொடர்பு:
0773 626 9985,
0795 816 9150
ஆழக்கடலின் கதையறிய அனைவரும் வருக..



.jpeg
)





கருத்துகள் இல்லை