ஏர்நிலம் தொண்டமைப்பு ஊடாக யூனியன்குளம் அ. த. க பாடசாலையில் இடம்பெற்ற உதவி வழங்கல்!!!!

 


ஏர்நிலம் தொண்டமைப்பின் ஊடாக சுவிற்சர்லாந்து மரத்தினி ஞான லிங்கேஸ்வரர் ஆலய ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்து வாழ் தாயக  உறவான உயர்திரு பத்மநாதன் விக்கினேஸ்வரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் கிளி/யூனியன்குளம் அ.த.க.பாடசாலையில் கடந்த 27/01/2026 அன்று 

மாணவர்களுக்கான சீருடை, மதிய நேர சிறப்புணவு மற்றும் கற்றல் கற்பித்தலுக்காக நிழற்படப் பிரதி இயந்திரம் என்பவை கையளிக்கப்பட்டது.



 கிளிநொச்சி மாவட்டத்தில் மிகப் பின்தங்கிய கிராமமான யூனியன்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இப்பாடசாலைக்கு கிடைத்த இந்த உதவி வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாகும். என பாடசாலைச்சமூகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் இவ்வுதவிக்கு கரம்கோர்த்த திரு பத்மநாதன் விக்கினேஸ்வரன் குடும்பம்  ஆயுளாரோக்கியத்தோடு  நீடூழி வாழவேண்டுமென ஏர்நிலம் நன்றியுடன் கரம்கூப்பியுள்ளது..

     இவ் உதவியானது  ஒரு இலட்சத்து ஐம்பத்தியிரண்டாயிரத்து நூற்றி அறுபது (152160/=) ரூபா பெறுமதியில் வழங்கப்பட்டுள்ளது. 

   எனவே இவ்வுதவிக்கு நிதி நல்கிய திரு பத்மநாதன் விக்கினேஸ்வரன் மற்றும் மரத்தினி ஞானலிங்கேஸ்வரர் ஆலயபரிபாலன சபையினர்க்கும் பாடசாலை சமூகத்தினரும் தமது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.


ஏற்பாடு:-

ஏர் நிலம் தொண்டமைப்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.