சிறுநீரகம் விற்று கடனை அடைத்த பெண் போராளிக்கு தொடரும் அவலம்!!


 மன்னாரில் வசிக்கும் பெண் போராளி ஒருவர் கொழுப்பு சென்று சிறுநீரகத்தை விற்று தனது கடனை கட்டியுள்ளார் கடனை கட்டிய பின்னரும் முன்னாள் போராளிக்கு கந்துவட்டி கும்பல் தொடர்ந்து கடன் கட்டவில்லை என மிரட்டல்கள் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமது இளமை காலத்தை முழுவதும் போராட்டத்தில் கழித்து இப்போது தமது குடும்ப வாழ்க்கையில் தம்மை அர்ப்பணித்து கொண்டுள்ள முன்னாள் போராளிகளின் நிலமை தற்போது கேளிக்கையாகவும் வருத்தமாகவும் உள்ளது.

குறிப்பாக தமது அன்றாட வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப முன்னாள் போராளிகள் பல சமூக பொருளாதார அரசியல் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அதன்டிப்படையில் மண்ணுக்காக போராடிய இந்த பெண் போராளி தனது சிறுநீரகத்தை விற்கும் நிலை ஏற்பட்டது. 

கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த கந்து வட்டி கும்பலும் கைது செய்யப்பட்டவில்லை. ஆனாலும் இந்த கந்துவட்டி கும்பலை விட்டு விட்டு இந்த சமூகம் வறுமைக்கு தள்ளபட்ட முன்னாள் போராளியை விமர்ச்சிக்கிறது.

நாம் எவ்வாறான சூழலில் வாழ்கின்றோம் என பார்க்கும் போது எமக்கு வெட்கமாக உள்ளது. தற்காலத்தில் கடன் தொல்லை தாங்காமல் நமது தமிழர் நிலப்பரப்பில் தொடர் தற்கொலை அதிகரித்து செல்கிறது.

இது ஒரு பெண்ணுக்கு நடந்த கொடுமை இல்லை. ஒவ்வொரு தமிழ் மற்றும் இலங்கை குடிமகனுக்கும் நடந்த கொடுமை இச் சம்பவம் தொடர்பாக உடனடியாக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஜனநாயக நாட்டில் கந்து வட்டியில் ஈடுபடும் கும்பல்களுக்கு கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து முற்றாக கந்து வட்டி இல்லாத ஒரு திரு நாட்டை உருவாக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய மக்கள் கூட்டணியின் இனைத் தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர்  தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.