மணல் கடத்திய பொலிஸ் - கைது செய்த பொலிஸ்!!
சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதன் காரணமாக பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இருந்தும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில் பருத்தித்துறை கற்கோவளத்தில் அகழ்ந்த மண்ணை ஏற்றிச் சென்ற டிப்பரை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் இடைமறித்தனர்.
பொலிஸாரின் சமிக்ஞையையும் பொருட்படுத்தாது சாரதி டிப்பரை ஓட்டுச் சென்றுள்ளார். அதனை விரட்டிச் சென்ற பொலிஸார், சாவகச்சேரி நவற்குழி பகுதியில் வைத்து டிப்பரைக் கைப்பற்றியதோடு, சாரதியையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் காங்கேசன்துறை விசேட குற்றப்பிரிவு பொலிஸார், மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை மறிக்க முற்பட்டபோது வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தப்பி ஓடியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை