நிசப்தமான இரவினில்..!


 நெஞ்சமெங்கும்

பரந்து விரிந்து கிடக்கிறது

பேரன்பு 


நிசப்தமான இரவினில்

நீழ்கிறது

நினைவுகள் 


நம் பெயர் எழுதிய

அந்த 

கடலோர

மணல் வெளித்தடங்களைத்

தேடுகிறேன் 


நிழலாய்

மறைந்துபோக விரும்பும் 

உந்தனுக்கு 


இன்றே

விடை தருகிறேன்

வலிக்காமல் நிகழ்வதில்லை

விடை பெறுதல்கள்... 


பிரபா அன்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.