ஸ்ரேலை சுடுகாடாக ஆக்கப்போகும் ஈரான்!
ஈரானின் இராணுவ வலிமை என்பது இன்று நேற்றல்ல, பல தசாப்தங்களாகத் திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு வியூகம் ஒன்று.
குறிப்பாக, Sijjil மற்றும் Fattah ஆகிய இரண்டு ஏவுகணைகளின் வரவு, மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சமநிலையை அடியோடு மாற்றி அமைத்துள்ளது.
சிஜ்ஜில் என்ற dancing ஏவுகணையானது ஈரானின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் ஒரு மைல் கல்லாகவே பார்க்கப்படுகிறது.
இதன் 'Solid Fuel’ தொழில்நுட்பம், ஒரு தாக்குதலுக்குத் தயாராவதற்கான நேரத்தை மிகக் கடுமையாகக் குறைத்துள்ளது.
அதாவது, ஒரு நாட்டின் உளவு செயற்கைக்கோள்கள் அதைக் கண்டறிந்து எச்சரிக்கை கொடுப்பதற்கு முன்பே, சிஜ்ஜில் விண்ணில் பாய்ந்து இலக்கைத் தாக்கத் தயாராகிவிடும்.
2,000 கிலோமீட்டருக்கும் அதிகமான range ஐ கொண்ட ஏவுகணையை , ஈரான் தனது எல்லைக்குள் இருந்துகொண்டே வெகுதொலைவில் உள்ள எதிரி முகாம்களைத் துல்லியமாகத் தாக்க முடியும் என்பதை உலகுக்கு பறைசாற்றியுள்ளனர்.
இருப்பினும், ஈரானின் உண்மையான தொழில்நுட்பப் பாய்ச்சல் என்பது அதன் ஹைப்பர்சோனிக் ஏவுகணையான ‘Fattah’ மூலம் வெளிப்பட்டது.
ஒலியை விட 15 மடங்கு வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஏவுகணை, நவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளின் (Missile Defense Systems) எமனாகவே பார்க்கப்படுகிறது.
வழக்கமான ஏவுகணைகள் ஒரு குறிப்பிட்ட வளைவுப் பாதையில் செல்வதால், 'Patriot’ அல்லது 'Arrow’ போன்ற அமைப்புகள் அவற்றைத் தடுத்துவிடும்.
ஆனால், 'Fattah' ஏவுகணையானது வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு தனது பாதையைத் தன்னிச்சையாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது.
இவ்வளவு வேகத்தில் வந்து கொண்டிருக்கும் ஒரு பொருள், எந்தத் திசையில் திரும்பும் என்று கணிக்க முடியாத நிலையில், அதைத் தடுத்து அழிப்பது தற்போதைய தொழில்நுட்பத்தில் இயலாத காரியமாகவே உள்ளது.
இனி வரும் காலங்களில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் என்பது வெறும் வெடிமருந்துகளின் மோதல் மட்டுமல்ல, அது மிகக் குறுகிய கால அவகாசத்தில் (Short reaction time) நிகழ்த்தப்படும் 'மின்னல் வேகத் தாக்குதலாக' இருக்கும்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் பல பில்லியன் டாலர்கள் செலவு செய்து உருவாக்கியுள்ள பாதுகாப்பு ரேடர்கள் interceptor கள் , இந்த அதிவேக மற்றும் திசைமாறும் ஏவுகணைகளுக்கு முன்னால் ஒரு பலவீனமான ஒன்றாக காட்சியளிக்கின்றன.
ஈரானின் இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம் எதிரி நாடுகளுக்குச் சுதாரிப்பதற்குக் கூட நேரம் கொடுக்காத ஒரு 'அதிபயங்கர' அழிவை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்பு அமைப்புகளை (Defense Architecture) மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
இது ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் ஈரானை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாகவும், பேச்சுவார்த்தைகளில் ஒரு வலுவான பிடிமானம் கொண்ட நாடாகவும் நிலைநிறுத்தியுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை