நம்பிக்கை போய்விட்டது என்கிறது ரியாத்.!

 


கத்தார், சவூதி எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல்; நம்பிக்கை போய்விட்டது என்கிறது ரியாத்.


ராஸ் லஃபானில் உள்ள தனது முக்கிய எரிவாயு நிலையத்தில் ஈரானிய ஏவுகணைகளால் "பெரும் சேதம்" ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கத்தார் உத்தரவிட்டுள்ளது.


ஈரானியத் தாக்குதலைத் தொடர்ந்து அபுதாபியில் உள்ள ஹப்ஷான் எரிவாயு நிலையங்களை ஐக்கிய அரபு அமீரகம் மூடியுள்ளது, அதே நேரத்தில் தனது இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களும் தாக்கப்பட்டதாக சவூதி அரேபியா கூறியுள்ளது. "ஈரான் மீது எஞ்சியிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் முற்றிலுமாக சிதைந்துவிட்டது" என்று ரியாத் கூறுகிறது.


புதிய ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களால் ‘பெரிய அளவிலான தீ விபத்துகள்’ ஏற்பட்டதாக கத்தார் எனர்ஜி தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து, கத்தாரின் பல திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) நிலையங்களில் “பெரிய அளவிலான தீ விபத்துகள்” ஏற்பட்டுள்ளதாக கத்தார் எனர்ஜி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


“புதன்கிழமை ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் நடத்தப்பட்ட முந்தைய தாக்குதலுக்குக் கூடுதலாக இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன... அந்தத் தாக்குதலில் பேர்ல் ஜிடிஎல் (எரிவாயுவிலிருந்து திரவமாக்கும்) நிலையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது,” என்று கத்தார் எனர்ஜி கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.