அமெரிக்கா விமானத்தை தரையிறக்கவும் ஈரான் கப்பலை நிறுத்தவும் இலங்கையிடம் கோரியது - ஜனாதிபதி


ஈரான் தனது கடற்படைக் கப்பல்களை இலங்கை வர அனுமதி கேட்ட அதே நாளில், அமெரிக்கா தனது இராணுவ விமானங்களை தரையிறக்க அனுமதி கோரியது. இதனால், இலங்கை அரசு ஒரு முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது.


இதன்படி 2026 பெப்ரவரி 26 அன்று, ஈரான் மூன்று கடற்படைக் கப்பல்களை மார்ச் 9 மற்றும் 13 ஆகிய திதிகளில் இலங்கை வர அனுமதி கேட்டது.


அதே நாளில் பிற்பகலில், அமெரிக்கா இரண்டு கடற்படை போர் விமானங்களை மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கேட்டது.


இந்த இரண்டு கோரிக்கைகளும் ஒரே நேரத்தில் அரசின் முன் வந்தன.

இதையடுத்து நடுநிலை கொள்கையை காக்க வேண்டும் எந்த ஒரு நாட்டுக்கும் ஆதரவாக நடக்கக் கூடாது என நினைத்தோம் அதனால் ஈரானின் கப்பல்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது அமெரிக்காவின் விமானங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது


இது தான் உண்மையான நடுநிலை என்று அவர் கூறினார்.


இதில் ஒரு பக்கம் அனுமதி கொடுத்தால், இலங்கை ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பது போல தோன்றும் பிறகு மற்ற நாடும் அதே அனுமதி கேட்கும் இதனால், வெளிநாட்டு போர் நிலை இலங்கைக்கு நெருக்கமாகி விடும். எனவே எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் இந்த கொள்கையை தொடர்வோம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கா பாராளுமன்றில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.