இன்னும் தீராத ஊடகத் தீண்டாமை..!
இந்தியாவிலேயே ஊடகத் தீண்டாமையை அதிகமாக அனுபவித்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே. கட்சித் தொடங்கி பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இன்றைக்கும் இந்த நிலைமை எனில் தொடக்க காலங்களில் எவ்வளவு கொடூரமான ஒதுக்கலை சந்தித்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
சிலர் போகிற போக்கில் நாம் தமிழர் கட்சி உட்கட்டமைப்பை சரி செய்யவில்லை. கிராமங்களுக்குள் ஊடுருவவில்லை. அலுவலகங்களைத் திறக்க வில்லை என்று ஆயிரம் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.
இதுவரை ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத, தனது வாக்கு வங்கி இன்னதென்று நிறுவாத ஒரு கட்சியின் பெயரையும் அதன் தலைவரின் பெயரையும் கூட தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக ஒரு இடைத்தேர்தல் கூட விடாமல் பங்கெடுத்து, எல்லா தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில் போட்டியிட்டு, எட்டு விழுக்காடு வாக்கு வங்கியை நிரூபித்து இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியை எவ்வளவு சாதாரணமாக உதாசீனப்படுத்துகிறார்கள் பாருங்கள். நாம் தமிழர் சந்திக்கும் ஐந்தாவது பொதுத் தேர்தல் இது. இன்னும் நிலைமை முழுமையாக மாறவில்லை.
இவ்வளவு ஒதுக்கல்கள், இருட்டடிப்புகளைக் கடந்து அடக்குமுறைகளையும் எதிர் கொண்டு கொள்கையில் விடாப்பிடியாக நிற்கிறார்கள் என்றால் வியப்பாக இருக்கிறது. சீமான் என்ற ஒரு தனிமனிதனின் நெஞ்சுரம் கட்சியின் கடைமட்ட உறுப்பினர் வரை வேர்விட்டு நிற்கிறது. குறை கூறுவது எளிது. கட்சி வளர்ச்சி குறித்து குறை கூறுபவர்கள் ஒரு கணம் உங்களை நாம் தமிழர் கட்சியின் தலைமையாக எண்ணிக் கொண்டு இச்செய்தி அறிவிப்பில் கருப்பு உருவில் பிறர் என்று போடப்பட்டுள்ளதைப் பாருங்கள். நாம் தமிழர் எதிர் கொள்ளும் சவால்களின் வீரியம் புரியும்.
ஆனந்தராஜ் பாஸ்கரன்

.jpeg
)





கருத்துகள் இல்லை