செம்பியன் பற்று வடக்கு பகுதியில் இறந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…!
செம்பியன் பற்று வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை செல்வசிங்கம்.
மார்ச் 22 ,வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து அப் பகுதி மக்கள் குறித்த வீட்டில் வசித்து வந்த நபர் சில நாட்கள் வெளியே நடமாடாத காரணத்தால் குறித்த வீட்டில் வசித்த நபரின் உறவினருக்கு அறிவித்துள்ளனர்
உடனடியாக உரிய இடத்திற்கு சென்ற உறவினர்கள் வீட்டினை திறந்து பார்த்த போது வீட்டில் வசித்த ஆண் சடலமாக காணப்பட்ட நிலையில் மருதங்கேணி பொலிசார்க்கு அறிவித்துள்ளனர்
மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை