இரானின் அரசியலமைப்பு மற்றும் தலைமைத்துவ பொது வாக்கெடுப்பு!

 இரானின் அரசியலமைப்பு மற்றும் தலைமைத்துவத்துக்கான நிபுணர்கள் குழுவின் (Assembly of Experts) உள்விதிமுறைகள்,


இஸ்லாமியக் குடியரசின் அதிஉயர் தலைவர் இறந்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை வகுத்துள்ளன.

அரசியலமைப்பின் 111-வது பிரிவின் கீழ், தலைவர் இறந்த நேரத்திலிருந்து நிபுணர்கள் குழுவால் புதிய தலைவர் அறிமுகப்படுத்தப்படும் வரை, மூன்று பேர் கொண்ட குழு தற்காலிகமாக தலைமைப் பொறுப்புகளை ஏற்கும்.

இந்தக் குழுவில் அதிபர், நீதித்துறையின் தலைவர் மற்றும் உயர்மட்ட நிர்வாகக் குழுவான துரித தீர்மான ஆலோசனைக்குழுவால் (Expediency Discernment Council) தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாவலர் குழுவின் (Guardian council) சட்ட அறிஞர்களில் ஒருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இருப்பினும், இந்த தற்காலிகக் குழுவுக்கு முழு அதிகாரம் கிடையாது. பின்வரும் சந்தர்ப்பங்களில் இதன் முடிவுகள் அமல்படுத்தப்பட வேண்டுமானால், அந்த ஆலோசனைக்குழுவால் முக்கால்வாசி உறுப்பினர்களின் ஒப்புதல் அவசியமாகும்:

1. அமைப்பின் பொதுவான கொள்கைகளைத் தீர்மானித்தல்.

2. பொது வாக்கெடுப்புக்கு உத்தரவிடுதல்.

3. போர் அல்லது அமைதியை அறிவித்தல்.

4. அதிபரைப் பதவியில் இருந்து நீக்குதல்.

5. கூட்டுப் படைத் தளபதி, ஐஆர்ஜிசி தலைமைத் தளபதி அல்லது மூத்த ராணுவ மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு தளபதிகளைப் பணிநீக்கம் செய்தல் மற்றும் நியமித்தல்.

நோய் அல்லது விபத்து காரணமாகத் தலைவர் தனது கடமைகளைத் தற்காலிகமாகச் செய்ய முடியாமல் போனாலும், இதே விதிகளின்படி இந்தக் குழு அவரது பொறுப்புகளை ஏற்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.