யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி சாதனை!!

 


கொழும்பு  இந்துக்கல்லூரியினால் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட " விவாத வேள்வி_2026" போட்டியில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் விவாத அணி, மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது.

தகுதிச் சுற்றுக்களில் முறையே    கொழும்பு பிஷப் கல்லூரி , டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, திருகோணமலை கோணேஸ்வரா கல்லூரி, கொழும்பு விவேகானந்தா கல்லூரி ஆகியவற்றை வென்று காலிறுதிக்குள் நுழைந்து பின்னர், 


 காலிறுதிப்போட்டியில் மீண்டும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியை வென்று அரையிறுதியில் முஸ்லிம் பெண்கள் கல்லூரியுடன் போட்டியிட்டு மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டது. தொடர்ந்து ஐந்து போட்டிகளில் திறமையாக வெற்றி பெற்ற  புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.