டித்வா சூறாவளி பாதிப்பில் இருந்து மீண்ட இல்லத்தில் புத்தாண்டு விழா – ஜனாதிபதி பங்கேற்பு!📸
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற சிங்கள–தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (14) முற்பகல் கலந்துகொண்டார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மல்பெலிகல கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய இல்லத்தில் பால் காய்ச்சி குடிபுகும் நிகழ்வும், புத்தாண்டு சுபநேரச் சடங்குகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கான அரசாங்க இழப்பீட்டின் அடிப்படையில், ஐந்து மாத காலத்திற்குள் இந்த இல்லம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கல்நேவ பிரதேச செயலகப் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய இல்லங்களில் இதுவும் ஒன்றாகும்.
மேலும், இப்பகுதியில் பகுதியளவில் சேதமடைந்த 66 இல்லங்களுக்கான இழப்பீடுகளும் வழங்கி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்களுடன் இணைந்து புத்தாண்டு சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேவேளை, ஜனாதிபதிக்கு அன்பான வரவேற்பளித்த மக்கள் அவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் கே.டி. லால்காந்த, வசந்த சமரசிங்க, வைத்தியர் சுசில் ரணசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுசந்த குமார நவரத்ன உள்ளிட்டோர், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.







.jpeg
)





கருத்துகள் இல்லை