யாழ்ப்பாணத்தில் தமிழ் நெறித் திருமணம்!📸


கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச் சங்கத்தால் தமிழ் நெறித் திருமணம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தி வைக்கப்பட்டது. 


பிரியதர்சன், லாவண்யா ஆகியோர் மண வாழ்வில் இணைந்து கொண்டனர். 



தமிழ்ச் சங்கத் தலைவர் வே.இறைபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில்

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாயினி இன்பராஜ் உட்படப் பலர் வாழ்த்துரையை வழங்கினார்கள். 



தமிழ் நெறியில் திருமணம், புதுமனைப் புகுவிழா, பிறந்த நாள், மங்கைப் பருவ மங்கல நீராட்டு விழா,புதுக்கடைத் திறப்பு விழா ஆகியவை  கிளிநொச்சி மாவட்ட தமிழ்ச் சங்கத்தினரால் கடந்த காலங்களில் நடத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


பதிவு - தபேந்திரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.