முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார்
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர தனது 83ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் தந்தையான விஜேசேகர, 1989 முதல் 2010 வரை மாத்தறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் விஜேசேகர படுகாயம் அடைந்தார்.
அவர் அந்தத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியபோதிலும், அச்சம்பவத்தைத் தொடர்ந்து நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை