தேனிசை செல்லப்பா காலமானார்..!
ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற ஒரு தமிழ் பாடகர். திருநெல்லி மாவட்டம் சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 1941, ஏப்ரல்,21, ல் பிறந்த இவர், 85, அகவையில் இன்று 2026, ஏப்ரல்,28, ல் இயற்கை எய்தினார். ஈழவிடுதலை எழுச்சி, தமிழர் தாகம், வீரத்தின் வேர்கள் போன்ற பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
ஈழத்தமிழர்களின் போராட்ட உணர்வுகளை தனது குரல் மூலம் திருநெல்வேலி மாவட்டம், சிங்கிலிப்பட்டி.
போராட்ட மேடையில் பாட்டுக்கச்சேரி ஒன்றை நடத்த சி.பா.ஆதித்தனார் விரும்பினார்.அதற்குப் பாடகர்கள் யாரும் வராதநிலையில் தேனிசை செல்லப்பா மட்டும் சென்றதால் செல்லப்பா மேடையேற்றப்பட்டார்.
அவரது பாடல், பிடித்துப்போன சி. பா. ஆதித்தனார் செல்லப்பாவை தமது அரசியல் பிரசாரத்தில் நியமித்து கட்சி அலுவலகத்திலேயே தங்கவைத்தார், அங்கிருந்தபடியே கட்சி மேடைகளிலும், திராவிடர் கழக மேடைகளிலும் பாடிக் கொண்டிருந்தார் செல்லப்பா.
அந்த நேரத்தில் இலங்கையில் 1964,அக்டோபர்,30 ல் மலையகமக்களை வெளியேற்றும் ஶ்ரீமாவோ ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து ஐந்து லட்சம் மலையகத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.
அதற்காக ஏ.எல்.நாராயணனை வைத்து ஒரு பாடலை எழுதி செல்லப்பாவைப் பாடவைத்தார் ஆதித்தனார்
அந்தப்பாடல்.
“செந்தமிழா மனம் பொங்குதடா.. சிங்களர் கொடுமை மிஞ்சுதடா
இதை நேரு பண்டிதரும் பார்க்கவில்லை சொந்த ஊரு மந்திரியும் கேட்கவில்லை.. யாரும் துணைக்கிங்கே வரவில்லை ஆறுதல் வார்த்தைகள் தரவில்லை
செந்தமிழா மனம் பொங்குதடா சிங்களர் கொடுமை மிஞ்சுதடா
இதனை மேடைதோறும் உணர்ச்சி மேலிடப் பாடினார் செல்லப்பா.
இந்தப்பாடல் தொடர்ந்து திராவிட இயக்க மேடைகளில் பாடிக்கொண்டிருந்த செல்லப்பாவின் குரலும் பாவமும் ஒரு மனிதரைக் கவர்ந்தது, அவர் பேபி சுப்பிரமணியம், ஈழத்திலிருந்து வந்து சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் செய்தித்தொடர்பாளர் மூலமாக ஈழத்துபுரட்சிப்பாடல்களை பாடினார்.
1990ஆம் ஆண்டு அவர் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார், யாழ்கோட்டை மைதானத்தில் ஐந்து லட்சம் மக்கள் முன்னிலையில் அவரது கச்சேரி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து எட்டு மாவட்டங்களில் மட்டக்களப்பிலும் அவரது கச்சேரி சிறப்பாக நடைபெற்றது,
கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை இன்னும்பல கவிஞர்களால் எழுதிய பல பாடல்களை பாடியுள்ளார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்..!

.jpeg
)





கருத்துகள் இல்லை