கடைசித் துப்பாக்கி ரவை வரை...!!


முள்ளிவாய்க்கால் புழுதியில் - எம்

முன்னோர்களின் குருதி தோய்ந்திருக்கிறது!


முடிந்துவிடும் என நினைத்த பகைவனுக்கு முன்னால்

முடியாது என நிமிர்ந்து நின்ற - எம்

முடிசூடா மன்னர்களின் வீரமிது!


தோட்டாக்கள் தீரும் வரை - அவர்கள் துப்பாக்கிகள் மௌனிக்கவில்லை... உயிர்க் காற்று பிரியும் வரை - அந்த உன்னத வேங்கைகள் பின்வாங்கவில்லை!


மே பதினெட்டின் இறுதி வினாடியில்

மண்ணைப் முத்தமிட்ட மாமனிதர்களே...

உங்களின் ஒவ்வொரு சொட்டுக் குருதியும்

எம் தேசியத்தின் ஆணிவேர்!


கந்தகக் காற்றில் உங்கள் மூச்சிருக்கிறது...

கடற்கரை மணலில் உங்கள் சுவடிருக்கிறது!


காவல் தெய்வங்களாய் எம் மண்ணைக் காத்தவர்களே...

நேருக்கு நேர் நின்று பகைவனைச் சந்தித்த

நெருப்புப் பிழம்புகளே...


உங்கள் தியாகத்தின் முன் தலைவணங்குகிறோம்!

ஈழம் உள்ளவரை - உங்கள்

புகழ் நிலைத்திருக்கும்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.