தருமை ஆதீனம் நாளை யாழ் வருகின்றார் !


தருமை ஆதீனம் நாளை யாழ் வருகின்றார் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு நிகழ்வுக்கு

இந்தியா தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலா மணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் யாழ்ப்பாணம் வருகை தருகின்றார்கள்.


நாளை யாழ்ப்பாணம் வருகை தரும் சுவாமி அவர்கள், தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வரும் சைவ சித்தாந்த பட்டப்படிப்பு அல கினை இலங்கையில் உள்ளவர்களும் கற்றுத்தேறும் வண்ணம் அறிமுகம் செய்து ஆரம்பம் செய்து வைக்கின்றார்.


யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையி னர் கற்கை நெறிக்கான அனுசரனை வழங்குகிறார்கள்.


இது தொடர்பான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு


யாழ்ப்பாணம், நீராவியடி கல்லூரி வீதியில் உள்ள சைவபரிபாலன சபையின் நாவலர் மண்டபத்தில் இடம் பெறும்.


கற்பித்தலில் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பங்கேற்பு செய் கின்றார்கள்.


தருமை ஆதீன சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளராக திருமதி. சிவப்பிரியா அவர்கள் 27 ஆவது நட்சத்திர குருமணி கள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நியமனம் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


பயிற்சிநெறியில் ஆர்வமுள்ளவர்களை இணைந்து பயனும் பலனும் பெற வேண் டும் என்பதே ஏற்பாட்டாளர்களின் நோக் கமாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.