யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரோக்கிய உணவகம் திறப்பு!
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் புனரமைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையில் நிறுவப்பட்டுள்ள ஆரோக்கிய உணவகம் இன்று (09.04.2026) சிறப்பாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் திறந்து வைத்தார்.
பொது மக்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் சுகாதாரத்தையும் சத்துணவையும் முன்னிறுத்தும் வகையில் இந்த ஆரோக்கிய உணவகம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சீரான உணவுப் பழக்கவழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் இங்கு வழங்கப்படவுள்ளன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், மாவட்டச் செயலகத்தின் பல்வேறு நிலை உத்தியோகத்தர்களும், ஆரோக்கிய உணவக ஊழியர்களும் பங்கேற்றனர்.
இந்த முயற்சி, அரசாங்க அலுவலகங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உருவாக்கும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை