விளக்கமறியலில் 22 பிக்குமார்!!


 சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த பாரிய போதைப்பொருள் கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதால், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் அனுமதி கோரினர்.

அதனை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான், சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இலங்கையில் அண்மைக்காலமாகப் பிடிபட்ட போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களில் இது ஒரு பாரிய மற்றும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகக் கருதப்படுகின்றது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.