கோணேச்சர ஆலயத்தில் இடம் கோரும் இலங்கை விமானப்படை!!

 


இலங்கையின் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் ஒன்றான  திருக்கோணேச்சர ஆலய பகுதியில் இலங்கை விமானப்படையினால் ரேடார் அமைக்க இடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


இத்திட்டத்திற்கு அனைத்து மக்களும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஆலய நம்பிக்கை சபையினால் கோரப்பட்டுள்ளது.


றேடார் அமைப்பதை சீன்குடா பகுதியில் செய்ய முடியும், இங்கு அமைப்பதன் நோக்கம் என்ன என்பது பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் இவ்விடயம் குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு அனைத்து திருகோணமலை மக்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.