பேரறிவாளனின் சாதனை!!

 


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் தற்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞராக வழக்கறிஞர் சங்கத்தில் தன்னைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். 

சிறை மீண்ட பின் அதிகம் இவர் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில், இவர் சட்டம் பயின்று ஒரு வழக்கறிஞராகத் தன்னை மாற்றியிருப்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

தனக்கான நீதிக்காக எந்த நீதிமன்றத்தின் வாசல் கடந்து காத்திருந்தாரோ, அதே நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.