சிறுவனைக் காணவில்லை!!

 


கிளிநொச்சி பொன்நகரைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 13ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாகத் பெற்றோர்  கிளிநொச்சி போலீஸில் முறைப்பாடு செய்துள்ளனர். 


சம்பவம் குறித்துத் மேலும்  தெரியவருவதாவது:

சித்திரை புத்தாண்டு  புத்தாடைகள் கொள்வனவு செய்வதற்காகச் சென்றிருந்த வேளையில், தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குறித்த சிறுவன், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


பொன் நகர், கிளிநொச்சியை சேர்ந்த பஸ்மின் நவீத் என்கின்ற 13 வயதுடைய  சிறுவன் ஆவான்.


பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதேவேளை, பொதுமக்களின் உதவியையும் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

சிறுவன் தொடர்பான தகவல் தெரிந்தால்  0771824506 எனும்  தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.