தம்பியால் ஏற்பட்ட துயரம்!!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அண்ணன் - அண்ணியை தம்பியே வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டியைச் சேர்ந்த தம்பதி. ஆந்திராவில் வீடு எடுத்து தங்கி, முறுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளனர். தேர்தலில் வாக்களிப்பதற்காக சில நாட்களுக்கு முன்பாகவே ஆந்திராவில் இருந்து மதுரைக்கு வந்துள்ளனர்
இதையறிந்த பழனியின் தம்பி, மது போதையில் கையில் அரிவாளுடன் அண்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அவரது அண்ணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.அவரது அண்ணன் பழனியையும் வெட்டி படுகொலை செய்தார்.
அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத சுப்பிரமணி, தனது கால் மற்றும் தலை பகுதியில் தனக்கு தானே வெட்டிக் கொண்டு அவரும் அந்த பகுதியிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை