இலங்கையில் இரட்டிப்பாகும் ஆபத்து!அதிகரிக்கும் டொலர் பெறுமதி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருவதால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
டொலரின் பெறுமதி ஸ்திரமடையும் வரையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக உயர்வடையக் கூடிய அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், எரிபொருள் போன்ற நுகர்வுப் பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையும் எனவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையிலே, உலகப் பொருளாதாரம் மிகப் பெரிய நெருக்கடிக்குள் நகர்ந்து கொண்டு இருப்பதாக கனடாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை