வவுனியாவில் நடப்பது என்ன??


வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு 3 மணி நேரத்தின் பின் தாக்கப்பட்டு விடுவிப்பு!

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடம் இருந்து நபர் ஒருவர் கைத் தொலைபேசியை பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தன்னை தாக்கியதுடன், அவர்களால எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் தன்னை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.  

இச் சம்பவம் தொடர்பில வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.