அண்ணன் சீமானுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!
அரசியலில் எதிர்ப்பு என்பது அவசியமான ஒன்று. ஆனால், யார் வந்தாலும் அவர்களை எதிர்த்துக்கொண்டே இருப்பது மட்டும் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு போதுமான அரசியலாக மாறாது. மக்கள் இன்று மிகவும் தெளிவாக அரசியலை கவனித்து வருகிறார்கள்.
பல தேர்தல்களை சந்தித்தும் இன்னும் சட்டமன்றத்தில் பெரிய வெற்றியை பெற முடியாமல் இருப்பதை, ஒரு அரசியல் பாடமாக எடுத்துக்கொண்டு மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டிய நேரம் இது.
2026 தேர்தல் பரப்புரையின் போது, தமிழகத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்த முக்கிய கட்சிகளை விட தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தையும், விஜய்யையும் அதிகமாக விமர்சித்தது பல பொதுமக்களிடையே கேள்விகளை உருவாக்கியது. மாற்றத்தை விரும்பிய மக்கள், புதிய அரசியல் சக்தியாக த வெ க மீது நம்பிக்கை வைத்தார்கள்.
தமிழக மக்கள் இன்று பழைய அரசியலுக்கு மாற்றாக புதிய ஆட்சியையும், புதிய எதிர்க்கட்சியையும் தேடுகிறார்கள். அந்த வாய்ப்பு இன்னும் உங்களிடம் இருக்கிறது. அதற்காக மக்கள் மனநிலையை புரிந்துகொண்டு, ஆக்கபூர்வமான அரசியலை முன்னிலைப்படுத்த வேண்டும்.
புதிய முதலமைச்சர் விஜய்யுடன் மக்களுக்கு பயன் தரும் விஷயங்களில் இணைந்து செயல்பட்டால், அது தமிழக அரசியலுக்கே நல்ல முன்னுதாரணமாக அமையும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை