கட்டளைத் தளபதி பிரிகேடியர் சொர்ணம் நினைவுகளுடன்..!


எமது போராட்ட வரலாற்றில் போராளிகளின் தியாகங்களை, அர்ப்பணிப்புக்களை, வீரச் செயல்களை நாம் கேட்கும்போதும் ஏனையோருக்குச் சொல்லும் போதும் ஒரு பெருமிதமும் கர்வமும் இருக்கும்.


ஆனால் விதிவிலக்காக ஒரு போராளியின் பேரைக் கேட்டாலே ஒரு கர்வம் வரும். அவர் தான் பிரிகேடியர் சொர்ணம். இந்த இனத்தின் ஒரு விதத் திமிர் என்றும் சொல்லலாம்.


ஒரு முறை சிவராம் தனிப்பட்ட முறையில் ஈழமுரசு ஊடகவியலாளர்களுடன் பேசும்போது சொன்னார், ஒரு படைத்துறை ஆய்வாளனாக கருணா, பால்ராஜ், பானு, தீபன் உட்பட பல புலித் தளபதிகளுடன் ஒப்பிடும்பொழுது சொர்ணத்தாரின் சண்டை Pattern தனக்கு ஆச்சர்யமூட்டுவதாகவும் அவரைப் புலிகளின் 'முறியடிப்புத் தளபதி' என்று வர்ணிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். 

புலிகளின் நிலத்தில் தடுப்பை உடைத்துக் கொண்டு ஊடுருவிய எதிரிகளை ஊடறுத்துத் தாக்கி விரட்டுவதில் சொர்ணம் ஒரு Expert - Military Genius என்பது அவரது புகழ்ச்சியின் பின்னணியாக இருந்தது.


புலிகளின் இறுதிப் பெரும் ஊடறுப்புச் சமர் சாளை, புதுமாத்தளன்,தேவிபுரத்தை மையமாக வைத்து நடந்தது.


அதை சொர்ணத்தார்தான் தலைமை தாங்கி நடத்தினார். அதில் விழுப்புண் அடைந்து மே மாதம் இதே நாள் வீரச்சவைத் தழுவிக் கொண்டார்.


இந்தப் பதிவை எழுதும் போதே ஒரு திமிர் வருகிறது - புலிகள் எமக்குத் தந்த அழியாச் செருக்கு இது. ❤💛

📢 மறக்காமல் Tamilarul.Net பக்கத்தைப் பின்தொடரவும்.


​🌐 இணையதளம்: www.Tamilarul.Net


​📢 தொடர்பு கொள்க:


​Facebook page: Like 👍|Share⚡️


​Share: 👥


▶️​YouTube: Tamilarul News Subscribe 🔔

 

வராகி அம்மன் பீடம்

லன்டன் 

WhatsApp 15562000705

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.