யாழ் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்!

 


யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர், பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து #உயிரிழந்துள்ளார். 


நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே #உயிரிழந்துள்ளார். 


அயல் வீட்டு காரருடன் காணி எல்லை தொடர்பான பிரச்சினை தொடர்பில் விசாரணைக்காக நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென #மயங்கி விழுந்துள்ளார். 


அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி #உயிரிழந்துள்ளார். 


#சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் #யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


#BreakingNews #SriLanka #LKA #LiveUpdates #செய்திகள் #SriLankaTamilNews #JaffnaNews

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.