இனி நான் அநுரவின் ஆள்... ராஜபக்ஷ நிகாயாவுக்கு குட்பை!"
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர், திடீரென தனது அரசியல் நிலைப்பாட்டை அதிரடியாக மாற்றி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு தனது முழுமையான ஆதரவை பிரகடனப்படுத்தியுள்ளார்!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்த போது, திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான பின்னணி இதோ..
எச்சரிக்கை வீடியோ முதல் எக்ஸ்க்ளூசிவ் மீட்டிங் வரை!
ஆரம்பத்தில் ஜனாதிபதியைச் சந்திக்க தேரர் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால், "என்னைச் சந்திக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை பாயும்!" என ஒரு காரசாரமான வீடியோவை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ சோசியல் மீடியாவில் தீயாய் பரவியதை அடுத்து, அலர்ட் ஆன ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினரும் (PSD) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் உடனடியாக களமிறங்கி, மட்டக்களப்பில் வைத்து ஜனாதிபதியுடன் ஒரு பிரத்தியேக சந்திப்புக்கு அவசர அவசரமாக ஏற்பாடு செய்தனர்.
🛑 "ராஜபக்ஷ நிகாயாவிலிருந்து விலகுகிறேன்!"
சந்திப்புக்குப் பின் வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்ட சுமனரத்ன தேரர், "நான் இனி அநுரகுமாரவின் ஆள்!" என்று ஓப்பனாக அறிவித்துள்ளார். அத்துடன், இவ்வளவு காலமும் ராஜபக்ஷாக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு முட்டுக்கொடுத்து வந்த பௌத்த பிக்குகளின் குழுவை "ராஜபக்ஷ நிகாய" (ராஜபக்ஷ பிரிவு) என சாடிய தேரர், அதிலிருந்து தான் முற்றாக விலகுவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார்!
மட்டக்களப்பில் நிலவும் சில மிக முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதியிடம் தேரர் நேருக்கு நேர் பேசியுள்ளார்....
🚩காணிப் பிரச்சினைகள் - எல்லைக் கிராமங்களில் உள்ள விவசாயிகளின் காணி விவகாரங்கள்.
♦️மதத் தலங்கள் - கிழக்கில் உள்ள பௌத்த தொல்பொருள் சின்னங்களின் பாதுகாப்புச் சர்ச்சைகள்.
♦️நிர்வாகக் குறைபாடுகள் - மாகாண மட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்த புகார்கள்.
🤝 ஜனாதிபதி கொடுத்த அஷ்யூரன்ஸ்!
தேரரின் கோரிக்கைகளை அமைதியாகக் கேட்டறிந்த ஜனாதிபதி அநுர குமார, எந்தவொரு தரப்புக்கும் பாரபட்சம் இன்றி, சட்டப் பூர்வமாக ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். ⚖️
💥ஜனாதிபதி தமக்கு செவிமடுத்ததற்கு நன்றி தெரிவித்த தேரர், நாடு நேர்மறையான திசையில் செல்ல ஜனாதிபதிக்கு தனது "அதிகபட்ச ஆதரவை" வழங்குவதாகக் கூறி விடைபெற்றுள்ளார். 👀
கடந்த காலங்களில் தீவிர ராஜபக்ஷ ஆதரவாளராக அறியப்பட்ட தேரரின் இந்த 180 டிகிரி அரசியல் யு-டர்ன் (U-Turn), தற்போது தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது! 📈
#AnuraKumaraDissanayake #lka #AmbitiyaSumanarathnaThera #Batticaloa #SrilankaPolitics #RajapaksaNikaya #AKD #NPP #BreakingNews #TrendingSrilanka #VPReport

.jpeg
)





கருத்துகள் இல்லை