வித்தியா கொலை வழக்கில் அதிர்ச்சி சம்பவம்!
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பூபாலசிங்கம் ஜெயக்குமார் (46), யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி வித்தியா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 7 பேருக்கு, 2017 செப்டம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
பின்னர் குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அண்மையில் உயர்நீதிமன்றம் 4 பேரின் மேன்முறையீட்டை நிராகரித்து மரண தண்டனையை உறுதிப்படுத்தியது. மற்ற 2 பேரின் தண்டனைக நீக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயக்குமார் நேற்று (24) இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவரின் தற்கொலைக்கான சரியான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன..!
#Vithiya #Jaffna #SriLanka #BreakingNews #TamilNews #Pungudutivu #justice #CrimeNews #jaffnanews
@highlightTopFanThe FollowingLaxsuthan LachuThanusan ThanuNirojh MidhunJathu JathursanNijanthini MathiyarasaTha RshBehind Me Tamil - CanadaLavanja SritharMahinthan Mahi

.jpeg
)





கருத்துகள் இல்லை