செம்மணி புதைகுழியில் 3எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!📸


செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


இதில் இரண்டு எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதாக காணப்படுகின்றது.


மேலும் 235 என இலக்கமிடப்பட்டுள்ள எலும்புக்கூடு இடுப்பிற்கு கீழ் பகுதி இல்லாத நிலையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


234 என இலக்கமிடப்பட்ட எலும்புக்கூட்டின் தலை (மண்டையின் உச்சிப்பகுதி) சிதைந்த நிலையில் காணப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல் அந்த எலும்புக்கூட்டின் தாடைப்பகுதியும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.


இன்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 எலும்புக்கூடுகளுடன் சேர்த்து செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மொத்தமாக அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.







#chemmani

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.