பதவியேற்பு விழாவில் சந்தேகம் !
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டபடி நாளை முதலமைச்சராகப் பதவியேற்பாரா என்பதில், ஆளுநரின் கண்டிப்பான உத்தரவால் தற்போது கேள்விக்குறி எழுந்துள்ளது.
ஆளுநர் மாளிகையின் நிபந்தனை நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சியமைக்க உரிமை கோரி இன்று (06) தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்தது. இந்த நிலையில், தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் முழுப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என ஆளுநர் மாளிகை தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பு விழாவில் சந்தேகம்
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவுக்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆளுநர் கோரியுள்ள முழுப் பட்டியலைச் சமர்ப்பிப்பதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக, திட்டமிட்டபடி நாளை விஜய் முதல்வராகப் பதவியேற்பாரா என்பதில் சந்தேகம் நிலவுவதாக அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
#தமிழ்நாடு #தமிழ் #தமிழ்செய்தி #நாளைமுதல்வரா #அரசியல் #செய்திகள் #TNPolitics #IndianPolitics #CMRace #ElectionBuzz #PoliticalDrama #Governor #Leadership #Thalapathy #VijayFans #ThalapathyFans #VijayAnna #Kollywood #TamilCinema #Trending #ViralPost #ExplorePage #InstaNews #NewsUpdate #SocialMediaTrending

.jpeg
)





கருத்துகள் இல்லை