மக்கள் நலனை விரும்பாத திராவிட கட்சிகள்!
தவெகவிற்கு அதிமுக முன்வந்து நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்திருந்தால், சிறந்த நடவடிக்கை என ஏற்கலாம்.
ஆதரவிற்கு எனக்கு என்ன லாபம் என கணக்கு போடுவது நியாயமே இல்லை. நாட்டின் மீது அக்கறை இல்லாதது என தெரிகிறது. கட்சி தலைவர்களுக்கு புரிந்தால் சரி... விளம்பரம் இல்லாமல், செலவு செய்யாமல், யாரு சட்டசபை உறுப்பினர் எனத் தெரியாமல் தனி மனிதனுக்காக 106 பேரை (விஜய் தவிர) தேர்ந்தெடுத்திருக்கிறார்களே...
#ஜனநாயகம் வென்றுள்ளது. #பணநாயகம் தோற்றுள்ளது.
50 ஆண்டுகள் கொள்ளை அடித்த மற்ற பரம்பரை கட்சிகள் வெட்கப்பட வேண்டிய நிலை உருவாகி உள்ளது...
TVK விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ஆட்சி நடத்த ஒரு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும். இலவசங்கள் மட்டும் கொள்கைகள் அல்ல. வளர்ச்சித் திட்டங்கள் வளர்ந்தால் நாடு செழிக்கும். ஆட்சி செய்தால்தான் புரியும். கடலில் நீச்சல் அடிப்பது போன்றது ஆட்சி.
அதை செய்யாமல், இவர்கள் எதை எதிர்த்தார்களோ அவர்களே இணைவது என பேச்சு வேறு..
தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் அதிமுக விற்கும் ராஜ தந்திரம் தெரியவில்லை.
வேறு என்னத்த சொல்லமுடியும்?
சிலர் சொல்வதுப் போல மீண்டும் தேர்தல் வைத்தால் விஜய் 200க்கும் அதிகம் வெற்றி பெறுவார்.
அதுவும் அதிக எண்ணிக்கை வாக்குகள் பெறுவார்.. மேலும் இந்த தீய சக்திகள் இளைஞர்களையும் பெண்களையும் அரசியல் குறித்து விவாதிக்க தூண்டுகிறார்கள். இதுவும் நல்லதே...
காத்திருப்போம்..

.jpeg
)





கருத்துகள் இல்லை