விபத்தில் பலியான கர்ப்பிணி பெண்!!
அனுராதபுரம் - விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் என தெரியவந்துள்ளது.
இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தார்.
கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, பெண் மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.
எதிர் திசையில் வந்த சிறிய லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கிராம உத்தியோகத்தரும், பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை