போதைப்பொருளுடன் நபர் கைது!!

 


திருகோணமலை சுமேதகம பகுதியில் 02 கிராம் 45 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், இன்று (29) பிற்பகல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பிரதி அமைச்சர் ஒருவரின் மனைவியின் தம்பி எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், இவர் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்றும், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்றும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பாக திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், சர்வதேச அல்லது உள்ளூர் போதைப்பொருள் வலையமைப்புடன் இவருக்கு உள்ள தொடர்புகள் குறித்தும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.