பக்தையிடம் அத்துமீறல் - இளைஞன் கைது!!


 பழனி அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதுடன், தொலைபேசியில் ஆபாச வீடியோ எடுத்த கேரள இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வைகாசி விசாகத் திருவிழா நாள் என்பதால் திருஆவினன்குடி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது.

அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தரிசன வழியில் நின்றிருந்த பெண் பக்தர்களிடம் நபர் ஒருவர் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும், தனது தொலைபேசி மூலமாகப் பெண் பக்தர்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.