பிரதமர் மோடி - தமிழக முதலமைச்சர் சந்திப்பு!!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சி. ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (மே 27) டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இப்பயணத்தின் போது முதலமைச்சர் விஜய் , இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ள நிகழ்வு, தேசிய மற்றும் மாநில அரசியல் களத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது .
புதுடெல்லிக்கு நாளை (27) செல்லும் முதலமைச்சர் விஜய், அங்குப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துத் தமிழக நலன் சார்ந்த பல்வேறு முக்கியத் திட்டங்கள் குறித்து விவாதிப்பார் என இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.
அதேசமயம் டெல்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி ஆட்சியமைத்துள்ள 'தவெக' அரசின் முதலமைச்சர், மத்தியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தரப்புத் தலைவர்களையும் ஒரே பயணத்தில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதால், முதலமைச்சர் விஜய் இன் டெல்லிப் பயணம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை