TVK ஆதரவாளர்கள் போராட்டம்!!

 


தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெளியே, தமிழக முதலமைச்சராக விஜய்க்கு உடனடியாகப் பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று TVK ஆதரவாளர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தற்போதைய சூழலில் பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் அர்லேகர் மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மை இருக்கிறது என நிரூபித்தால் மட்டுமே முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநரின் இந்த முடிவுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் எதிப்[பு தெரிவித்து வரும் நிலையில் TVK ஆதரவாளர்கள் தமிழக ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டம் நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள ‘தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கானப் பணிகளில் இறங்கியுள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு இன்னும் 12 இடங்கள் தேவைப்படுகின்றது.

இந்நிலையில் கூட்டணியை நிரூபித்தாலே ஆட்சி அமைக்க அழைப்பதாக ஆளுநர் தவெக தலைவர் விஜய்யிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.