யாழில் இருந்து பாதயாத்திரை!!


 வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காம கந்தனை காண செல்லும் இலங்கையின் மிக நீண்ட பாத யாத்திரைப் பயணம் இன்று (23) காலை ஆரம்பமாகியது.

800 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம், 54 நாட்கள் காடு, மலை, ஆறு, எல்லாவற்றையும் கடந்து முருகப்பெருமானின் திருநாமங்களை போற்றிப் பாடி நடந்தே செல்வார்கள் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படு வருகின்றது

நீண்ட வரலாற்றை கொண்ட இந்த புனிதமான பாத யாத்திரையில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து முருக அடியவர்கள் கலந்து கொள்வார்கள் , தமிழர்கள் சிங்களவர்கள் என இன மத வேறுபாடின்றி அனைவரும் முருகப்பெருமானின் புகழ் பாடி கதிர்காம கந்தனை காண செல்கிறார்கள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.