கிளிநொச்சி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!


  கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு, பதின்ம வயதுச் சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் பத்து வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

குறி்த்த குற்றச்சாட்டுத் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிசாரால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்களையும்  கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் நேற்றையதினம்(27.05.2026) குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி G. கருணாகரன் முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிறுமியை வன்புணர்விற்கு உட்படுத்தியமை மற்றும் கடத்திச் சென்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் இரண்டாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.